Abstract Proceedings of IESMDT - 2021
Full conference PDF is available to the subscribed user. Use your subscription login to access,
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் கல்வியியல் கருத்துக்கள்
உலக இலக்கியங்கள் அனைத்தும் நெறிமுறைகளையும், ஒழுகலாறுகளையும், மானிட சமுதய வாழ்வின் பண்பாட்டுச் சிறப்புக்களையும் உணர்த்துவதற்காகக் காலந்தோறும் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. தமிழில் முகிழ்ந்துள்ள இலக்கியங்கள் அனைத்தும் தமிழர்தம் கல்வி அறிவின் வெளிப்பாடுகள் என்று கூறுவது சாலப்பொருந்தும். கல்வியின் பயனாகத்தாம் கற்றறிந்தவற்றை எதிர்வரும் சமூகத்திற்கு எடுத்தியம்ப முன்னோர் பயன்படுத்திய கருவியே இலக்கியப்படைப்புகள், எத்துணைப் பாங்குடன் கல்வி சமூகத்தில் விதைக்கப்பட்டதோ, அத்துணை அளவிற்கு அது இலக்கிய விருட்சமாக வளர்ந்து இன்றுவரை தமிழ்ச்சமூகத்திற்குத் தண்நிழல் நல்கி வருகின்றது.
மனித வாழ்க்கைக்குத் தேவையான வரையறைகளை அமைத்துக் கூறும் நீதிநூல்கள் உலகின் பலமொழிகளிலும் தோன்றியிருக்கின்றன. இடத்திற்கும் காலத்திற்கும். சமூகத்திற்கும் ஏற்ப அவை தம்மை மாற்றத்திற்கு உட்படுத்திக் கொள்ளும். வடிவமைப்பில் மட்டுமே நீதிநூல்கள் தம்மை புதுப்பித்துக் கொள்கின்றனவே தவிர வெளிப்படுத்தும கருத்தில் அவை தம்முள் ஒப்புமை உடையனவாகத் திகழ்கின்றன. துனி மனிதனுக்கும், சமூகத்திற்கும் அடிப்படையான வாழ்க்கை நெறிமுறைகளை வருத்தும், தொகுத்தும் கூறுவதனால் நீதிநூல்கள் காலங்கடந்து நிற்கின்றன. தோற்றம் பெற்றுப் பல்லாயிரம் ஆண்டுகள் கடந்த பின்னும் இன்றும் புதுப்பொலிவுடன் மக்கள்தன் (வாழ்வை) தெறிப்படுத்தும் சமூகக்காரணியாக நீதிநூல்கள் முன்நிற்கின்றன.
காலவெள்ளத்தில் நீத்திநிற்கும் தமிழர்தம் நீரிநூல்கள் உலகம் முழுவதம் பரந்து பல்வேறு மொழிகளில் வடிவம் பெற்று தமிழர்களின் அறத்தைப் பறைசாற்றி நிற்கின்றன இவை திட்பமும், நுட்பமும் நிறைந்த கருத்துக்களை அடைந்திருக்கின்றன. விழுதுகளாகவும், வலியுறுத்துவதால் மனிதனின் என்றும் இயற்கை மங்காத அறிவு, இலைகளாகவும், தன்மையை விஞ்ஞான மெய்ஞ்ஞானக் கிளைகளாகவும், கருணைக் கனிகளாகவும், அறவேர்களாகவும் வளர்ந்து சமூகம் தண்நிழலில் மகிழ்வெய்திட அடிப்படையாக இருப்பது கல்வியெனும் கூறே வரலாற்று அகலத்திற்கும் மனிதனின் கல்வியின் அழத்திற்கும் ஏற்பவே அறிவானது வளர்ச்சி எய்தும், இயற்கையிலிருக்கும் அறிவைச் சமூகமாற்றத்திற்குத் தேவையான விஞ்ஞானமாகவும், மெய்ஞ்ஞானமாகவும் மாற்றும் வல்லமை பொருந்தியதே கல்வி. கல்வியின் துணையின்றி இயற்கையில இருக்கும் அறிவானது வளர்ச்சிஅடையாமல் இறுதியில் அஃது புல்லறிவாய்ப் போய்மானுடப பிறப்பையே கேள்விக் குறியாக மாற்றிவிடும
பதினெண் கீழ்க்கணக்கு
17/09/2021
292
IESMDT290
IMPORTANT DAYS
Paper Submission Last Date
February 27th, 2026
Notification of Acceptance
March 25th, 2026
Camera Ready Paper Submission & Author's Registration
April 20th, 2026
Date of Conference
May 29th, 2026