Abstract Proceedings of IESMDT - 2021
Full conference PDF is available to the subscribed user. Use your subscription login to access,
திரிகடுகம் கூறும் வாழ்வியல் நெறிகள்
மக்களின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டு இலக்கியங்கள் இயற்றப்படுகின்றன. அந்தந்தக் காலச்சூழலுக்கு ஏற்ப மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக இலக்கியங்கள் விளங்குகின்றன. இங்ஙனம் வையத்துள் வாழ்வாங்கு வாழும் முறையை வாழ்த்துகாட்டிய நம் முன்னோர்கள் தாம் படைத்த இலக்கியங்கள் வழி அறக்கருத்துக்களை இனிதே உணர்த்தியுள்ளனர், சான்றோர்கள் கூறிய இலக்கியங்களின் அறிவுரைகளைக் கேட்டு அதன்படி வாழும் வாழ்க்கை இனிமையும். எளிமையும். உடையதாகின்றது.
வாழ்க்கையில் உண்டாகும் இன்ப துன்பங்கள் நெளிவு சுளிவுகளை உணர்ந்து அனுபவம் நிறைந்த அறிவுடைய சான்றோர் கூறும் அறிவுரைகள் நம்மை தவறான பாதையில் செல்லாமல் தடுத்து நல்வழிப்படுத்துகின்றன. வாழ்க்கை அன்புடையதாகவும், பண்புடையதாகவும் பிறர்க்குப் பயனுடையதாகவும் விளங்க உயரிய சிந்தனைகளும் அதன்படி செயல்படும் மனப்பான்மையும் அடிப்படையானவை. வாழுகின்ற மக்களுக்கும்இ வாழப்போகின்ற மக்களுக்கும் வாழ்ந்தவர்கள் பாடம அமைய வேண்டும். அதாவது ஒருவரின் அனுபவங்கள் மற்றோருக்குப் பாடமாக அமைவது மனித வாழ்வின் சாரமாகும். இதனை நன்கு உணர்ந்தவர்கள் நம்முடைய முன்னோர்கள் அதனால் தான் தமது அனுபவங்களைக் கலைகலாகப் பதிவிட்டு வருங்காலச் சமூகத்துக்கு வழிகாட்டியாக விளங்கி வருகின்றனர். எனவே அவர்கள் தங்களின் பட்டறிவு மூலம் கண்ட வாழ்வியல் சிந்தனைகளை இலக்கியங்களின் வழியாகச் சமூகத்திற்கு வழங்கியுள்ளனர்.
அற நூல்களில்; ஒன்றான திரிகடுகம் மக்களுக்கான ஒழுக்கங்களைச் சார்ந்து அமைகிறது. திரி என்பதற்கு மூன்று என்று பொருள். கடுகம் என்பதற்கு காரமுள்ள பொருள் என்று பொருள். திரிகடுகம் என்பது சுக்கு, மிளகு, திப்பிலி எனும் மூன்று பொருள்களையும் குறிக்கும். இந்த திரிகடுகம் சமூகத்தில் மனிதரின் வாழ்வியலுக்கு மிகவும் அவசியம் ஆகும். அதாவது சமூக சட்ட திட்டங்களை மனிதர்கள் காலங்காலமாகக் கடைப்பிடித்து வருவதால் மனித வாழ்க்கை பிரச்சினை இல்லாமல் இருக்கின்றது.தனி மனிதன் கடைப்பிடிக்க வேண்டியவைஇ சமூக அமைப்பில் உள்ளவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் எனபல உள்ளன. இவற்றையே தமிழ் அற இலக்கியங்களில் ஒன்றான திரிகடுகம் குறிப்பிடுகின்றது. திரிகடுகம் வடமொழியில் இருந்து பெறப்பட்டது. சங்ககாலம் தொட்டே வடமொழி தாக்கம் தமிழில் ஆங்காங்கே இருப்பது கண்கூடு. அவற்றுள் திரிகடுகமும் ஒன்று. களப்பிரர் ஆட்சியில் மக்களை அறவழிப்படுத்துவதற்காக நீதி இலக்கியங்கள் தோன்றியது மருத்துவ பொருட்களை முதன்மைப்படுத்தி அறச்செய்திகளை இந்நூல் நல்குகிறது. மருத்துவப் பொருட்களான சுக்கு மிளகு திப்பிலி மூன்றும் சேர்ந்து திரிகடுகம்; எனப்படும். இவ்வாறு திரிகடுகமானது பாடலுக்கு மூன்று கருத்துக்களை எடுத்துரைக்கின்றது.
திரிகடுகம், நீதி இலக்கியங்கள்
17/09/2021
290
IESMDT288
IMPORTANT DAYS
Paper Submission Last Date
September 27th, 2025
Notification of Acceptance
October 25th, 2025
Camera Ready Paper Submission & Author's Registration
November 11th, 2025
Date of Conference
November 28th, 2025